தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என்றார் பெரியார்: ஹெச்.ராஜா

தமிழ் மொழியே இருக்கக்கூடாது என்பதற்காக தமிழர் மீது திணிக்கப்பட்டதே திராவிடம் என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “தமிழக மக்களிடம் திணிக்கப்பட்ட சொல் தான் திராவிடம். திராவிடத்தை மலையாளம், கன்னடம், தெலுங்கு பேசும் மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என பெரியார் பேசியதற்கு ஆதாரம் உள்ளது. இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதால் இவர்கள் வசைப்பாடுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

ஏற்கனவே பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை முகநூலில் பதிவிட்டிருந்தார்.அது தான் அல்ல தனது அட்மின் பதிவு செய்தார் என அவர் விளக்கமளித்தார். அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பெரியார் குறித்தும் திராவிடம் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்தை ராஜா கூறியுள்ளார்.