செப்டம்பரில் நயன்தாரா அறம் 2 ஆரம்பம்

செப்டம்பரில் நயன்தாரா அறம் 2 ஆரம்பம்

‘அறம்2’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் வரும் செப்டம்பரில் தொடங்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்தாண்டு வெளியான நயன்தாராவின் ‘அறம்’ மாபெரும் வெற்றியை அடைந்தது. மிகச் சாதாரணமான ஒரு கதையை மிக அழுத்தமாக எடுத்திருந்தார் இயக்குநர் கோபி நயினார். மனதை பதற வைத்த இதன் திரைக்கதை அத்தனை பேரையும் உலுக்கியது. அப்போதே அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்பட்டது. அந்தச் செய்தியை போலவே இயக்குநர் அதன் இரண்டாம் பாகத்திற்காக திரைக் கதையை எழுத ஆரம்பித்திருந்தார். அதன்படி அவர் இதை சோஷியல் ட்ராமாவாக கட்டமைத்திருப்பதாக தெரிகிறது. அதன்படி படக்குழு வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

முதல் பாகத்தில் நயன் மாவட்ட ஆட்சியராக நடித்திருந்தார். அதன்படி அவர் இந்தப் படத்தில் அரசியல்வாதியாக தொடர்வார் என கூறப்பட்டது. ஆனால் படக்குழு இதன் கதையை முற்றிலும் புதிய கோணத்தில் கொண்டு செல்ல இருப்பதாக தெரிகிறது.