டூவீலரில் சென்ற தம்பதிகளை லைசன்ஸ் கேட்டு மறித்தபோது நிற்காமல் சென்றவர்களை பின்தொடர்ந்து உதைத்து கீழே தள்ளியதில் பெண் பலி

8 March 2018 : திருச்சி தலைகவசம் இல்லாமல் மோட்டார் வாகனத்தில் வந்தவர்களை துவாக்குடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும், அதை கவனிக்காமல் வந்த மோட்டார் வாகனத்தை , மற்றொரு மோட்டார் வாகனத்தி துரத்தி வந்த போலீஸ்காரர் ஒருவர் எட்டி உதைத்ததாகவும், இதில் தடுமாறி ரோட்டில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் திருவெறும்பூர் பெல் ரவுண்டாணா அருகே பைக்கில் வந்த கணவன் படுகாயம்.கர்பிணி மனைவி பலி.பொதுமக்கள் 3000 பேர் சாலை மறியல்.திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை யில் போக்குவரத்து பாதிப்பு.

இந்த சம்பவத்துக்கு காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜை கைது செய்து, மறியல் நடைபெறும் இடத்துக்கு அழைத்து வர வேண்டும். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தும்போது, அவர்கள் மீது சிலர் தண்ணீர் பாட்டில்களை வீசினர். அத்துடன், மறியலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், கூடுதலாக அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, அங்கு நின்று கொண்டிருந்த அதிரடிப்படை போலீஸார் வந்த வேன் மீது சிலர் கல்வீசி தாக்கினர். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும் போலீஸார் மீதும் கற்களை வீசினர். இதையடுத்து, அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஹெல்மெட் வாகன சோதனையின்போது பெண் பலியான சம்பவத்தைக் கண்டித்து அமைதியாகப் போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “திருவெறும்பூரில் ஹெல்மெட் அணியாததால் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். மனிதநேயமற்ற இச்செயல் வேதனையளிப்பதோடு, இதனைக்கண்டித்து அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதும் தடியடி நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.